கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14.11.2026 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குடும்ப அட்டை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026
நவம்பர் 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் 14.11.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளன.
இம்முகாம்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் / நீக்குதல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை பெறுதல், கைப்பேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம் தொடர்பான கோரிக்கை மனுக்களைப் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.