கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15.11.2026 அன்று TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நடைபெறுகிறது – 2,557 தேர்வர்கள் பங்கேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (டிப்ளமோ / ஐ.டி.ஐ) தேர்வு – 2026, 15.11.2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள 9 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 2,557 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்வர்கள் காலை 9.00 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். நுழைவுச்சீட்டு, கருப்பு நிற பந்துமுனைப் பேனா மற்றும் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவர். முள் கடிகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்; டிஜிட்டல் கடிகாரங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு முழுவதும் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு TNPSC கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 419 0958 அல்லது கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தை 6384123073 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

(PDF 219KB)