கோயம்புத்தூர் மாவட்டத்தில் POCSO வழக்குகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்க 20 ஆதரவு நபர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், POCSO வழக்குகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக 20 ஆதரவு நபர்கள் (Support Persons) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், குழந்தைகள் நலன் தொடர்பான துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களாகவோ அல்லது தொடர்புடைய பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவத்துடன் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ இருக்க வேண்டும். பணிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். ஒதுக்கப்படும் ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு தவணைகளாக அதிகபட்சம் ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் 30.11.2026-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU), கோயம்புத்தூர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.