கோயம்புத்தூர் மாவட்டத்தில் 20.11.2026 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நவம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.11.2026 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவரத்துடன் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம். தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணிநியமன ஆணை வழங்கப்படும். இம்முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு: 0422-2642388.