கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இயற்கை இடர்பாடுகள், மற்றும் பருவமழை பொய்த்துப் போதல் ஆகிய காரணத்தால் நிகழும் எதிர்பாராத மகசூல் இழப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இப்பகுதி விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தகுந்த காலக்கெடுவிற்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.