Close

கோயம்புத்தூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2024

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு.டி.ஆனந்த் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் திரு.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கே.கார்த்திகேயன். இ.கா.ப., கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார், மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திருமதி.ஸ்வேதா சுமன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப.,, மாநகராட்சி துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.கார்த்திக், கிழக்கு மண்டலக்குழு தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.ராம்குமார், திரு.கோவிந்தன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.சரவணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 95KB)