கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2024

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப, அவர்கள் 13.04.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் பயிற்சி திரு. ஆசிக் அலி இ.ஆஃ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.செல்வராஜ், உதவி ஆணையர்கள் திருமதி.ஸ்ரீதேவி(வடக்கு), திருமதி.சந்தியா(மேற்கு), காவல் துறை உதவி ஆணையர் திரு.நவீன்குமார், உதவி இயக்குநர் நிலஅளவை) திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.எழில், திரு.மோகனகிருஷ்ணன், திரு.சிவசங்கர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.