கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.10.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அக்டோபர் – 2026ஆம் மாதத்திற்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் 30.10.2026 வெள்ளிக்கிழமை 09.30 மணியளவிலும்> அதனைதொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோயம்புத்தூர்  மாவட்ட ஆட்சியர்   திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்களால்  நேரடியாக  நடத்தப்பட  உள்ளது.
இதன்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இரண்டாவது தளகூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலைமை வகித்து நடத்த  உள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கேட்டுக்கொள்ளப்படுகிறது.   தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனுக்களை அளிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்டஆட்சியர்

(PDF 366KB)