கோயம்புத்தூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026

2026ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சிப் பகுதிகளைத் தவிர) தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் கடைசி நாள் 31.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் அல்லது இ-சேவை மையங்கள் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 01.11.2026 முதல் தற்காலிக பட்டாசுக் கடை உரிமங்கள் வழங்கப்படும்.

(PDF 520KB)