கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் SSC, RRB மற்றும் IBPS போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசின் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆகியவை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான 250 மணி நேர கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

இப்பயிற்சியில் கணிதம், நுண்ணறிவுத் திறன், ஆங்கிலம், கணினி அறிவு மற்றும் வங்கி தொடர்பான பாடங்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள் மற்றும் திருப்புதல் வகுப்புகள் இடம்பெறும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவம்: https://forms.gle/GYFTgqtbA3RHeNHA6

தொடர்புக்கு: 0422-2642388, 9499055937, 9499055938, 9865319116, 936576081.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர்கள் இப்பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

(PDF 232KB)