கோவையில் “தேசத்திற்கான சமரசம் 3.0” முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை சமரசத்தின் மூலம் தீர்த்து வைக்கும் நோக்கில், “தேசத்திற்கான சமரசம் 3.0” என்ற தலைப்பில் நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் 01.10.2026 முதல் 31.12.2026 வரை மாவட்ட சமரச தீர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. ஜெ. ஸ்ரீதேவி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கோயம்புத்தூர் மாவட்ட சமரச தீர்வு மையங்கள் மற்றும் அந்தந்த நீதிமன்றங்களில் செயல்படும் சமரச தீர்வு மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.