கோவையில் 39வது அரசுப் பொருட்காட்சி ஜூன் 11 அன்று தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
கோயமுத்தூர் மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 39-வது அரசுப் பொருட்காட்சியினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் நாளை (11.06.2026) மாலை 5.00 மணியளவில் தொடங்கி வைத்து, அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.