கோவை மத்திய சிறையில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
கோயம்புத்தூர் மத்திய சிறையில் காலியாக உள்ள இரண்டு தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் மற்றும் ஒரு செவிலி உதவியாளர் பணியிடத்தை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தொடர்புடைய சாதிச் சான்றிதழின் நகலை இணைத்து, கோயம்புத்தூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர், கோயம்புத்தூர் – 18 என்ற முகவரிக்கு 22.10.2026-க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் பின்னர் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.