Close

கோவை வடக்கு வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 25.06.2026 வரை

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026

கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு வட்டம், 1435ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் பெரியநாயக்கன்பாளையம் உள்வட்டம் 16.06.2026 அன்றும், துடியலூர் உள்வட்டம் 17.06.2026 அன்றும், கவுண்டம்பாளையம் உள்வட்டம் 18.06.2026 அன்றும், சரவணம்பட்டி உள்வட்டம் 19.06.2026 அன்றும், கணபதி உள்வட்டம் 23.06.2026 அன்றும், சங்கனூர் உள்வட்டம் 24.06.2026 அன்றும், அனுப்பர்பாளையம் உள்வட்டம் 25.06.2026 அன்றும் நடைபெறவுள்ளது.

(PDF 223KB)