சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 24.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேரு நகர் மேற்கு, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா கலையரங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ முடித்த அனைத்து வயதினரும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்; வயது வரம்பு இல்லை. 50 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.