சூலூரில் 17.11.2026 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு குறைதீர் முகாம் 17.11.2026 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சூலூர் வட்டாரம் இராவத்தூர் பிரிவு, RVS பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள RVS செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் உதவி, பேருந்து அட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும். ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் சூலூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.