செப்டம்பர் 25-ஆம் தேதி பேரூரில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மாதந்தோறும் நடத்தப்படும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, கோயம்புத்தூர் மாவட்டம், பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அப்போதே பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.
வேலைநாடும் நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் tnprivatejobs.tn.gov.in மற்றும் ncs.gov.in இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வேலைநாடும் நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.