தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை 9-வது சுற்று கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப. கேட்டுக்கொண்டுள்ளார். (PDF 307KB)