தனித்தேர்வர்கள் பெறப்படாத SSLC மற்றும் HSC அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மார்ச் 2023, ஜூன்/ஜூலை 2023, மார்ச் 2024 மற்றும் ஜூன்/ஜூலை 2024 ஆகிய பருவங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை (HSC) பொதுத்தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்கள், இச்செய்தி வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது உரிய ஆவணங்களுடன் அஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். தவறினால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் விதிமுறைப்படி அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

(PDF 233KB)