தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 490 வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் இன்று (29.08.2026), மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு முதற்கட்டமாக 490 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.


