தேக்கம்பட்டியில் நடைபெறவுள்ள யானைகள் நலவாழ்வு முகாமிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள யானைகள் நலவாழ்வு முகாம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் அலுவலகத்தில் இன்று (11.11.2026) நடைபெற்றது.

