தேர்தல் கல்வியறிவு மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான கூட்டம்
இன்று (09-10-2026), கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் கல்வியறிவு மன்ற (ELC) ஒருங்கிணைப்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே ஜனநாயக மதிப்புகள், வாக்காளர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நேர்மையான வாக்களிப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ELC 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், ECINET செயலி மூலம் தகுதியுள்ள முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஊக்குவித்தல் மற்றும் மாவட்டத்திலுள்ள 1,065 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு வாக்காளர் பதிவு முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

