Close

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026

இத்தேர்தலில் அதிக அளவிலான வாக்கு சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் முன்னாள் படைவீரர்களின் தேவையும் பாதுகாப்பு பணிக்கு அதிகரித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் இத்தேசம் நலன் காக்கும் இப்பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அனைவரும் இத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விருப்பத்துடன் பணிபுரிந்திட வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களின் நேர்மை, கடமையாற்றல் மற்றும் பணியில் ஈடுபாடு இவைகளை பாராட்டியும் அங்கீகரித்தும் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னாள் படைவீரர்கள் முழுமனதுடன் ஏற்று இப்பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 167KB)