தொண்டாமுத்தூர் வட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 10/11/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து சிறப்பு மெகா முகாமை நடத்துகின்றன. இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

இம்முகாமில் மருத்துவப் பரிசோதனை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், இலவச அறுவை சிகிச்சைக்குப் பயனாளிகளைத் தேர்வு செய்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, பேருந்து அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தங்கள் போன்ற சேவைகளும் வழங்கப்படும். தொண்டாமுத்தூர் வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இம்முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 405KB)