நாட்டின மாடுகளை வளர்க்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்க சிறப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2026–2027 ஆம் ஆண்டில் நாட்டின மாடுகளைப் பாதுகாத்து, அவற்றின் இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கில், நாட்டின மாடுகளை வளர்க்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாகவும், காங்கேயம், புலிக்குளம், உம்பளாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி நாட்டின மாடுகள் அல்லது தோடா எருமைகளை வளர்ப்பவர்களாகவும் உள்ள தகுதியான பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு நேரடி பயனாளர் பரிமாற்றம் (DBT) மூலம் ரூ.5,000 வழங்கப்படும். பயனாளிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையத்தை அணுகி, பரிந்துரைக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 65KB)