பாரத்நெட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உரிமையாளர் முகவர் கூட்டாளர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதி நிபந்தனைகளை TANFINET திருத்தியமைத்துள்ளது – விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2026.

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உரிமையாளர் முகவர் கூட்டாளர்களை (District Level Franchisee Partners – DLFPs) தேர்வு செய்வதற்கான நிதித் தகுதி நிபந்தனைகளைத் திருத்தியுள்ளது. அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான குறைந்தபட்ச சராசரி ஆண்டு வருவாய் ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் இரண்டு உரிமையாளர் முகவர் கூட்டாளர்களைத் தேர்வு செய்து, இறுதிநிலை பிராட்பேண்ட் இணைய இணைப்பு சேவைகளை வழங்கவும், இணையக் கட்டமைப்பைப் பராமரிக்கவும் TANFINET திட்டமிட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் உரிமையாளர் முகவர் கூட்டாளர்கள், ஒளியிழை வடங்கள் (Optical Fibre Cables) மற்றும் இணையக் கட்டமைப்பு உபகரணங்களைப் பராமரித்தல், தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்தல் மற்றும் இணையதளக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்ப இணையதளம்: https://tanfinet.tn.gov.in

விண்ணப்பப் பாதுகாப்புத் தொகை: ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் ரூ.25,000/- (திரும்பப் பெறக்கூடியது மற்றும் வட்டியில்லாதது).

தேர்வுக்குப் பிறகு செலுத்த வேண்டிய பாதுகாப்புத் தொகை: ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் ரூ.2,00,000/-.

விண்ணப்பிக்கும் காலம்: 10.11.2026 முதல் 30.11.2026 வரை.

ஏற்கனவே குறிப்பிட்ட வருவாய் கோட்டத்திற்கு விண்ணப்பித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தியவர்கள், அதே வருவாய் கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் TANFINET இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.