பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2024

பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 03.04.2024 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150-க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தாமஸ் பார்க் சென்றடையும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெகதீஷன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 90KB)