பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு TNPSC போட்டித்தேர்வு இலவச பயிற்சி
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய பார்வையற்றோர் இணையத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி (Visually Impaired) மாணவ, மாணவியர்கள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 94990 55937 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.