பிச்சனூரில் செப்.09 அன்று மக்கள் தொடர்பு முகாம்
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம், மகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வரும் 09.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, 27.08.2026 அன்று காலை 11.00 மணிக்கு, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தலைமையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கப்பட்டு, 09.09.2026 அன்று நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
எனவே, பிச்சனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.