பிரதமரின் PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டம் 2026–27
2026–27 ஆம் கல்வியாண்டிற்கான பிரதமரின் PM YASASVI கல்வி உதவித்தொகைத் திட்டத்தை, 100% தேர்ச்சி பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான மாணவ, மாணவியர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ₹75,000 மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹1,25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். புதுப்பித்தல் விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் 31.10.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகள் புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதற்கான கடைசி நாள் 15.11.2026 ஆகும். 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான புதிய விண்ணப்பத் தேதிகள் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.