பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குழுக்களுக்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தொடங்க ரூ.3 இலட்சம் வரை நிதியுதவி
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தொடங்குவதற்கு, அலகு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் மதிப்பிலான உபகரணங்கள், இடைநிலைச் செலவினம் மற்றும் பணி மூலதனம் வழங்கப்பட உள்ளது.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:
-
குழுவில் 10 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.
-
உறுப்பினர்களின் வயது குறைந்தபட்சம் 20 ஆக இருக்க வேண்டும்.
-
10 உறுப்பினர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.
-
உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
-
MSME துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் இடம்பெற்றுள்ள குழுக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியுள்ளவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் குழுவாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.