பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (11.09.2026), வரும் 17.09.2026 அன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதையொட்டி, திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.







