பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம்
3ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம்,
கோயம்புத்தூர் – 641 018.
E-mail: adtpcbe@gmail.com
Phone: 0422-2301210 / 8925809218
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம்
3ஆவது தளம், மாவட்ட ஆட்சியரகம்,
கோயம்புத்தூர் – 641 018.
E-mail: adtpcbe@gmail.com
Phone: 0422-2301210 / 8925809218
திரு.கோ.துவாரகநாத்சிங்
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கோயம்புத்தூர் மண்டலம்.
இவ்வலுவலகம் பேரூராட்சிகளின் மண்டலத் தலைமையகமாக செயல்படுகிறது. கோயம்புத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 33 பேரூராட்சிகளின் பொது நிருவாகம், திட்டப்பணிகள் செயலாக்கம், வரி மற்றும் வரியில்லா இனங்கள் வசூல், பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் விநியோகம், பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை கட்டமைப்பு சேவைகள், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், சந்தைகள், சமுதாயக்கூடங்கள், பூங்கா மற்றும் விளையாடும் இடங்கள், இடுகாடு / புதைகாடு போன்ற பொதுச்சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல், மன்றக்கூட்டங்கள், ஏரியா சபா, வார்டு கமிட்டி நடத்துதல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல் போன்ற இனங்கள் பேரூராட்சிகளில் முறையாக மேற்கொள்ளப்படுவதை கண்காணித்து இதற்கான அறிக்கையினை பேரூராட்சிகளின் இயக்ககம் மற்றும் மாவட்ட நிருவாகம் ஆகிய உயர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தல்.
பேரூராட்சிகளின் நிருவாகம் – கோயம்புத்தூர் மண்டலம் |
|
வ.எண். | பதவி |
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் – நிருவாகப்பிரிவு | |
1 | உதவி இயக்குநர் |
2 | தேர்வுநிலை செயல் அலுவலர் (நிருவாகம்) |
3 | செயல் அலுவலர் (கணக்குகள்) |
4 | உதவியாளர் |
5 | இளநிலை உதவியாளர் |
6 | தட்டச்சர் |
7 | ஈப்பு ஓட்டுநர் |
பொறியியல் பிரிவு | |
1 | செயற்பொறியாளர் |
2 | உதவி செயற்பொறியாளர் |
3 | உதவி பொறியாளர் |
4 | இளநிலை பொறியாளர் |
5 | பணி மேற்பார்வையாளர் / வரைவாளர் |
6 | பணி ஆய்வாளர் |
பேரூராட்சிகள் அலுவலக அலகு | |
1 | செயல் அலுவலர் |
2 | துப்புரவு ஆய்வாளர் |
3 | தலைமை எழுத்தர் |
4 | இளநிலை உதவியாளர் |
5 | வரிவசூலர் |
6 | பொருத்துனர் / மின் பணியாளர் |
7 | துப்புரவு மேற்பார்வையாளர் |
8 | பதிவறை எழுத்தர் |
9 | அலுவலக உதவியாளர் |
10 | அலுவலக காவலர் |
11 | குடிநீர் திட்ட விநியோக பணியாளர் |
12 | தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் |
13 | தூய்மை பணியாளர் |
2021-22 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமக்கு நாமே திட்டத்திற்காக நாளதுவரை பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ. 404.32 இலட்சம் பெறப்பட்டு 70 எண்ணிக்கையிலான திட்டப்பணிகள் ரூ.1044.00 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பேரூராட்சிகளில் செயலாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக படைவீரர் கொடி நாள் வசூலில் மாவட்ட நிருவாகத்தால் நிர்ணயிக்கப்படும் இலக்கு பேரூராட்சித்துறையால் முழுமையாக அடையப்பட்டுள்ளது.
தூய்மைக்கான மக்கள் இயக்கம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆரம்பநிலையில் குப்பைகள் தரம்பிரித்து வழங்குதல், நகரத்தூய்மை, பொது இடங்களில் அசுத்தம் செய்வதை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட பள்ளி / கல்லூரி மாணவர்களுடன் பொதுமக்களை பெருமளவில் ஈடுபடுத்தி மாதந்தோறும் 2 -வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பேரணி, ஒருங்கிணைந்த தூய்மைப்பணி, மரக்கன்றுகள் நடுதல், நெகிழி ஒழிப்பு, நீர்நிலைகளை தூய்மையாக பராமரித்தல், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றுதல் போன்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளாக பள்ளி மாணவர்களிடையே கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி ஆகியன நடத்தப்படுகிறது. சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரை கௌரவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் பேரூராட்சியால் நடத்தப்படுகிறது.