பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் ஆகஸ்ட் 8-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும்
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் – 2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் வருகின்ற 08.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம் மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பொதுமக்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.