Close

பொது விநியோக சேவைகள் குறைதீர் முகாம் ஜூன் 13 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ஜூன்-2026 மாதத்திற்கான சிறப்பு குறைதீர் முகாம் 13.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

(PDF 226KB)