Close

போத்தனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.1-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 25.08.2026 முதல் மாவட்டத்தின் 25 இடங்களில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

அதன் தொடர்ச்சியாக, 01.09.2026 அன்று போத்தனூரில் அமைந்துள்ள பாத்திமா கனி கல்யாண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகளைத் தேர்வு செய்தல், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும், ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தங்கள், குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகளும் முகாமில் வழங்கப்பட உள்ளன.

01.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 303KB)