மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட, மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான திரு.ஆஷிஷ் குமார் இ.வரு.ப., அவர்கள் தொடங்கிவைத்து, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மே.ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., மற்றும் , வட்டாட்சியர்கள், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..(PDF 270KB)