Close

மசக்காளிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் செப்.3-ல் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் சிறப்பு முகாம், 03.09.2026 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மசக்காளிபாளையத்தில் அமைந்துள்ள மணி மகால் மணிஸ் திரையரங்கம் அருகில் நடைபெறுகிறது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு UDID அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், இலவச அறுவை சிகிச்சைக்கான பயனாளிகள் தேர்வு, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.

மேலும், ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம், குடும்ப அட்டையில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.

எனவே, கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

(PDF 464KB)