Close

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு எதிர்வரும் 01.04.2026 பங்குனி உத்திரம் தினத்தன்று நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026

மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 01.04.2026 அன்று பங்குனி உத்திரம் தினத்தன்று மேற்படி நாளில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் வழியாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் விழாவிற்கான முன்னேற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் துணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி. கா.விமலா அவர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். (PDF 213KB)