Close

மருத்துவமனையில் கைவிடப்பட்ட “பூவிழி” பெண் குழந்தை: 30 நாட்களுக்குள் உரிமை கோரலாம்

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27.04.2026 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்களால் குழந்தை மீட்கப்பட்டு 08.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு “பூவிழி” என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுக வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் யாரும் உரிமை கோராத நிலையில், தத்தெடுப்பு விதிமுறைகள், 2022-ன் கீழ் குழந்தை தத்தெடுப்பிற்கு சட்டப்பூர்வமாக தகுதியானதாகக் கருதப்பட்டு, தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

(PDF 264KB)