மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பிலான 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு 50% மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% மானியமும் வழங்கப்படும். தகுதியான பிரிவினருக்கு குறிப்பிட்ட கருவிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கப்படும்.
விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7ஆம் தேதி மற்றும் 15 முதல் 21ஆம் தேதி வரை ‘உழவர் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியான பயனாளிகள் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, மானியத்தில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.