Close

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85+ வயது வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு வசதி – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து (10) சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(40 % மேற்பட்ட) மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நேர்வில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level Officer), படிவம் 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகைதரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும்/ படிக்கக் கேட்டும், ஆதாரங்கள் ஏதும்கோரும்பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்திற்கு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(40 % மேல்) மற்றும் 85+ வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பான, தங்களது விருப்பத்தினை, வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று 03.04.2026-க்குள் படிவம் 12D-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுதேர்தலை, சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு மதிப்பிற்குரிய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85+வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 61KB)