Close

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2024

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 10.04.2024 அன்று 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இந்திய வரைபட வடிவில் ஒன்றிணைந்து நின்று, வாக்காளர் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திருமதி.சந்திரா, பி.பி.ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.எல்.பி.தங்கவேலு, துணை தலைவர் திரு.அக்ஷய் தங்கவேலு, கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ். நந்தகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.(PDF 160KB)