மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அறிவியல், வனவியல் அல்லது மீன்வள அறிவியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரை உள்ளவர்களும், தொடர்புடைய களப்பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களுடன் 16.10.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட மகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பாலக்காடு மெயின் ரோடு, மதுக்கரை, கோயம்புத்தூர் – 641 115 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு makamaikovai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.