Close

மீட்கப்பட்ட “ஆதித்தியன்” குழந்தை தொடர்பாக 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரலாம்

வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026

13.07.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், அரசிபாளையத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை, சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் மூலம் குழந்தை மீட்கப்பட்டு, 29.07.2026 அன்று குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகள் நலக்குழு அந்தக் குழந்தைக்கு “ஆதித்தியன்” என பெயரிட்டுள்ளது.

மேற்கண்ட குழந்தை தொடர்பாக உரிமை கோர விரும்புவோர், உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக யாரும் உரிமை கோராத நிலையில், தத்தெடுப்பு விதிமுறைகள், 2022-ன் கீழ், குழந்தை சட்டப்பூர்வமாக தத்தெடுப்பிற்கு தகுதியான குழந்தையாகக் கருதப்பட்டு, தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

(PDF 351KB)