முதலமைச்சர் கோப்பை 2026–27: கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026–27 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர் முதல் அக்டோபர் 2026 வரை நடைபெறவுள்ளன. இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட விளையாட்டுகள் உட்பட மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க 06.08.2026 முதல் 31.08.2026 மாலை 6.00 மணி வரை இணையவழியில் முன்பதிவு செய்யலாம்.