முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 36 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (17.08.2026), அரசுப் பள்ளிகளில் பயின்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 36 மாணாக்கர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், GD Trust சார்பில் 48 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10.22 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி, அவர்களை ஊக்குவித்தார்.
![]() |
![]() |
![]() |
![]() |



