முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்களுக்கான வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க நவம்பர் 9, 2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசின் சார்பில், 2026–2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களில் 10 பேருக்கு தலா அதிகபட்சம் ரூ.36 இலட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே 15.10.2026 வரை வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து முதுகலைப் படிப்பிற்கான நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் (Unconditional Offer Letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் 09.11.2026-க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆணையர்,
சிறுபான்மையினர் நலத்துறை,
கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம்,
சேப்பாக்கம், சென்னை – 600 005.
வெளிநாடு சென்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும், ஏற்கனவே கல்லூரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.