வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
கோயம்புத்தூர் (120) – தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில், இன்று (10-10-2026) நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக நடைபெற்ற இம்முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் தொடர்புடைய தேர்தல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


