வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் ஆடுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், ஊரகப் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், “வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்” கீழ் தகுதியான மகளிருக்கு 100% மானியத்தில் செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ரூ.30,000 மதிப்பிலான 5 ஆடுகள் (1 ஆண் கிடா மற்றும் 4 பெண் ஆடுகள் அல்லது 5 பெண் ஆடுகள்), இரண்டு ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து மற்றும் உடனடி தீவனச் செலவிற்காக ரூ.2,500 வழங்கப்படும். ஆடுகளை நல்ல முறையில் பராமரிக்கும் பயனாளிகளுக்கு ஓராண்டுக்குப் பிறகு ரூ.2,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

18 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தகுதியுடையவர்கள் 27.11.2026 முதல் 17.12.2026 வரை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்ப உதவிக்கு கோயம்புத்தூர் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் உள்ள துணை இயக்குநர் அலுவலகம் அல்லது வேட்டைக்காரன்புதூர் கால்நடை மருத்துவமனையை அணுகலாம். (PDF 91KB)